திருடன் மணியன்பிள்ளை 2013ம் ஆண்டு காலச்சுவடு பதிப்பகத்தால், மலையாளத்தில் இருந்து மொழிபெயர்த்து வெளியிடப்பெற்ற நூல். மூலநூலிற்கான ஆசிரியர் ஜி. ஆர். இந்துகோபன். தமிழில் மொழிபெயர்ப்பு குளச்சல் மு. யூசுப்.
இந்நூல் கேரளத்திலுள்ள கொல்லம் மாவட்டத்தில் இரவிபுரம், வாழத்துங்கல் எனும் ஊரில் 1950இல் பிறந்து, ஒரு திருடனாக வாழ்ந்து, தான் சந்தித்த பல்வேறு நிகழ்வுகளையும், தனது சாகச வாழ்வையும் மணியன்பிள்ளை கூறும் தன்வரலாற்று நூலான “தஸ்கரன்: மணியன்பிள்ளயுடெ ஆத்மகத” என்ற மலையாள நூலின் மொழிபெயர்ப்பாகும். இதை அவருடன் இணைந்து எழுதியவர் அதே ஊரைச் சேர்ந்தவரும், மலையாள மனோரமா நாளிதழில் பணியாற்றுபவருமான ஜி. ஆர். இந்துகோபன் என்பவராவார். இந்துகோபன் 88 அத்தியாயங்களில், 590 பக்கங்களில் மணியம்பிள்ளையின் 58 ஆண்டுகால வரலாற்றை எந்தவித சமரசமுமில்லாமல் பதிவு செய்து உள்ளார். மலையாள உலகின் வாழ்வியல் அனுபவங்களை இந்நூல் கண்முன்னே நிறுத்துகிறது.