மண்ணை இழந்த மனிதர்களையும் மனிதர்கள் இழந்த மண்ணையும் பற்றிய கதை. போராட்டத்தின் பெயரால் தமது வாழ்வைத் தொலைத்த எளிய மக்களின் பெரும் துயரத்தின் ஆவணம் இந்த நாவல். வாழ்வனுபவங்களிலிருந்து அவர்கள் பெறும் பாடங்கள் அவர்களை அசாதாராணமான பாத்திரங்களாக மாற்றுகின்றன.
பார்த்து அறியக்கூடிய கிராமக் காட்சியின் அறியப்பெறாத உள்ளோட்டங்களை “வெள்ளாவி”க்குப் பிந்திய இந்நாவலில் வெற்றிகரமாக முன்வைக்கிறார் விமல் குழந்தைவேல்.