ஆம் அய்யா ஜெயமோகனின் அறம் வாசித்து கொண்டு இருக்கிறேன்..சமீப நாட்களில் மிக அதிகமாக தெரிந்து கொண்ட நாஞ்சில் நாட்டு எழுத்தாளர்.
சமீபத்தில் அய்யா சோ தர்மன் அவர்களும் ஜெயமோகன் அவர்களை பற்றி சொல்ல கேட்டேன்…
வாசிக்க ஆரம்பித்தேன் அறத்தை…
அதில் இரண்டாவது கதை
“வணங்கான்” ஒரு கதை சொல்லுவது போலே தான் கதை களம்உள்ளது.
வணங்கான் தனது அப்பா கருத்தான் நடார் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறது..
ஆம் திருவாங்கூர் சமாதானம் நட்டாலம் அருகில் ஒரு.கிராமத்தில் உயர் சாதி நாயர் மூலம் சொல்ல கூடாத அடிமை தனதின் கொடுமையை அனுபவிக்கிறார்.
ஒரு முறை யானையின் நான்கு கால் களுகு இடையே கட்டி போட்டு விடுகின்றார்கள்…அந்த கொடுமையை மிக துல்லியமாக பதிவு செய்து உள்ளார் அய்யா ஜெயமோகன்..
பின்பு கருத்தன் நாடார் நாகர்கோவில் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாதவை…
ஆனாலும் தான் படிக்க வேண்டும் என்ற வெறி கொண்டு பள்ளி செல்லாதே நாடார் படிக்க ஆரம்பித்தார்.இதன் இடையே சாதி கொடுமை அவர் மேல உட்சம் கொண்டு ஆடுகிறது…ஆங்கிலம் கற்று கொண்டார்.. தீண்டாமை இடையே..
மாபெரும் தலைவர் நாஞ்சில் நாட்டு பொக்கிஷம் நேசமணி அவர்கள் நட்பு கருத்தன் நாடர்க்கு கிடைக்கிறது..
பிரிட்டிஷ் ஆட்சியின் தனது ஆங்கில அறிவு மூலம் தென்காசி பகுதிக்கு நில அளவை ஆய்வாளராக பணியில் சேருகிறார்…அங்கு ஜமீந்தார் ஆட்சி நடை பெறுகிறது..அங்கும் ஆதிக்க சாதி தீண்டாமை கொடுமையை இவர் மேல சாடுகிறது. அய்யா ஜெய மோகன் அவர்கள் நாஞ்சில் நாட்டில் நடைபெற்ற சாதி கொடுமையும் , தென்காசி இலஞ்சி யில் ஜமீன்தார் சாதி கொடுமையும் தோல் உரித்து காட்டி உள்ளார்..இந்த வணங்கான்நில்..
இறுதியாக நில.அலுவலக பிரிட்டிஷ் அதிகாரி சாதி கொடுமை மூலம் 27 நாட்கள் அரசு அலுவலகத்தில் விட்டு வெளியே செல்ல முடியாமல் ஜமின் ஆட்களால் அடைத்து வைக்க படுகிறார்..
மறுநாள் தென்காசி இலஞ்சி ரோட்டில் ஒரு யானை முன்பு நடந்து வர அதன் பின்பு பெரு வெட்டார் நாடார் நேசமணி அவர்கள் நடந்து வருகிறார்..
கருத்தன் நாடராய் யானை.மீது ஏற்றி இலஞ்சி ஜமீன் வீட்டுக்கு சென்று அவர்களை மிரட்டி விட்டு பள்ளியாடி செல்கிறார்..
கருத்தன் நாடார் க்கு திருமனாகி ஆண் குழந்தை பிறக்கிறது…
அந்த குழந்தையை பள்ளியாடி பெரு வெட்டர் நாடார் மகன் வக்கீல் நேசமணி அவர்களிடம் கொடுக்கிறார்…
குழந்தை பெயர் என்ன என்று நேசமணி கேட்கிறார்…கருத்தன் நாடார் சொல்லுகின்றார் மகன் பெயர் “வணங்கான்” என்று அய்யா பெயரை கேட்டதும் ஒரு சிரிப்பு சிரிக்கிறார்..
அந்த சிரிப்பு
அது அடிமை தனத்தை
சாதி கொடுமையை
வென்று எடுத்த ஒரு
நாஞ்சில் நாட்டு போராளியின் சிரிப்பு..
இந்த உண்மை கதை முடிந்த பொது என் கண்களில்.நீர்…என்னை அறியாமல்..
ஒரு வேளை கருத்தன் நாடார் என் அப்பா மாடசாமி போல முன் தோன்றினார்..
அய்யா ஜெயமோகன் அவர்களுக்கு.மிக்க நன்றிகள்…காரணம் என் மகளுக்கு தினம் ஒரு கதை சொல்ல வேண்டும்…
நாளைய கதை …வணங்கான் இல்லை
கருத்தன் நாடார்…
அன்புடன்
பாண்டிய நாட்டில்.பிறந்து
நாஞ்சில் நாட்டில் படித்து
அரபு நாட்டில் வசிக்கும்
வாசகன்…
RMS மதுவதனிகா மங்கள்
Reviews
There are no reviews yet.