புத்தகம் :தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
ஆசிரியர் :மாரி செல்வராஜ்
1) சில புத்தகங்களை ஒரே மூச்சில் வாசித்து விட தோன்றும்.
2) சில கொஞ்சம் கொஞ்சமாய் உள்வாங்க தோன்றும்.
3)இன்னும் சில புத்தகங்களை எத்தனை முறை படித்தாலும் புது உணர்வு தரும்.
4) சில புத்தகங்களுக்கு ஆழமான வாசிப்பு பலமுறை தேவைப்படும்.
“தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” இப்போதைக்கு முதல் ரகம் விரைவில் மூன்றாம் ரகத்தில் இணைந்துவிடும். ஒரு கதை நம்மில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கதாபாத்திரங்கள் நம்மையோ இல்லை நம்மில் ஒருவரையும் நினைவூட்ட வேண்டும்.
இச்சிறுகதைகள் எல்லாம் நம்மில் ஒருவரின் கதையாகத்தான் தோன்றுகிறது.
* ” அவர்கள் எனக்கு இட்ட பெயர் சுரேஷ்” கதையில் நாயின் உணர்வுகளோடு நாம் இணங்கிப் போக முடியும்.
*”அடுக்கு செம்பருத்தி “, “நினைவில் கொதிக்கும் பால்யம் “, “தட்டான் பூச்சிகளின் வீடு “, “ஆனந்த் ஷா”வின் கதாப் பாத்திரங்கள் நம் பால்யத்தை நினைவூட்டும்.
*போராட்டங்கள் எப்படி வன்முறை ஆக்கப்பட்டன? போராட்டங்கள் எப்படி ஒடுக்கப்பட்டன? *ஒரு கல் போதும். உண்மைதான் ஒரு போராட்டத்தை திசை திருப்ப, கலைக்க, ஒடுக்க, வன்முறையாக்க ஒரு கல் போதும் .
காந்தி தாத்தா என்ன சாதி எனக் கேட்கும் செந்திலும், சாதிக்கு எதிராக போலி வேடத்தில் திரியும் அப்பாதுரைகளையும் நாம் அடிக்கடி சந்திக்கிறோம்.
.இன்னும் இன்னும் நிறைய இருக்கிறது சொல்ல……..
. உண்மையில் எப்பொழுதும் மனதில் நிற்கும் சிறுகதைகளும், கதாபாத்திரங்களும் நிறைந்தது தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்.❣️
அருந்ததி ரவிசங்கர்
Reviews
There are no reviews yet.