செம்மீன் மீனவர் சமூகத்துக்கதை. செம்பன் குஞ்சுவின் வாழ்க்கையையும் வீழ்ச்சியையும் சொல்லும் கதை. கடற்கரைக் கன்னி கறுத்தம்மாவின் தூய காதல் கதை. தனது செயல் ஒரு தியாகம் என்பதையே உணராத பரீக்குட்டியின் கதை. ஊக்கமும் உற்சாகமுமே உருவான சக்கியின் உழைப்புக்கதை. ஆண்மையும் ரோஷமும் மிக்க இளைஞன் பழனியின் கதை. மேலைக்கடல் அன்னையின் செல்லக்குழந்தைகளது நித்தியக் கதை.
எளிய கதாபாத்திரங்களையும் சாதாரண சம்பவங்களையும் கொண்டு வரைந்த அழியா வண்ணச் சொற்சித்திரம் செம்மீன். தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய இந்தப் புகழ்பெற்ற மலையாள நாவல் 1959 ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. யுனெஸ்கோ ஆதரவில் உலக மொழிகள் பலவற்றுள் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. பல இந்திய மொழிகளில் சாகித்திய அகாதெமியின் ஆதரவில் வெளிவந்துள்ளது. இதைத் தமிழாக்கம் செய்தவர் சுந்தர ராமசாமி.
செம்மீன் (மலையாள நாவல்)
தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில் சுந்தர ராமசாமி.
சாகித்திய அகாதெமி வெளியீடு
பக்கம் 318
Reviews
There are no reviews yet.